states

img

உள்ளாட்சி அமைப்புகளின் வரலாற்றுச் சாதனை... காலாண்டில் அதிக திட்ட செலவு 95.31 சதவிகிதம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தின் உள்ளாட்சி அமைப்புகள் திட்டங்களை செயல்படுத்துவதில் கடந்த நிதியாண்டின் (2020-2021) கடைசி காலண்டில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்துள் ளன. திட்ட செலவில் 95.31 சதவிகிதத்தை செலவழித்ததன் மூலம் இந்த சாதனை அளவுஎட்டப்பட்டது. இதற்கு முந்தைய சாதனை

யாக 2017-18 ஆம் ஆண்டில் திட்டச் செலவு 85.45 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஆண்டுபட்ஜெட் ஒதுக்கீட்டான ரூ.7276.66 கோடியில்,ரூ.6954.2 கோடி மார்ச் 31 வரை செலவிடப் பட்டது. நிலுவையில் இருந்த பில்களுக்கு ரூ.39.22 கோடி வழங்கப்பட்டது.
இதன் மூலம் 2,30,938 திட்டங்கள் நிறைவடைந்தன. பொதுப் பிரிவில், செலவு 109.30 சதவிகிதமாகும். தாழ்த்தப்பட்டோர்  உட்கூறுதிட்டத்தில் 92.07 சதவிகிதமும், பழங்குடியினர் உட்கூறு திட்டத்தில் 91.11 சதவிகிதமும் செலவிடப்பட்டுள்ளது. நிதி ஆணைய மானியத்தின் திட்ட  சாதனை 78.12 சதவிகிதம். கோவிட் நெருக்கடி மற்றும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தாண்டிய பின்னர் இந்த சாதனை ஈட்டப்பட்டுள்ளது.

வயநாடு 100 சதவிகிதம்
மாவட்டங்களில், வயநாடு 100 சதவிகிதத்துடன் முன்னிலையில் உள்ளது. கொல் லம், திருவனந்தபுரம் தவிர அனைத்து மாவட்டங்களும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக செலவு செய்தன. 583 உள்ளாட்சி அமைப்புகள் 100 சதவிகிதத்தை தாண்டின. இதில் 461 பஞ்சாயத்துகள், 77 ஒன்றிய பஞ்சாயத்துகள், 38 நகராட்சிகள் மற்றும் ஏழு மாவட்ட பஞ்சாயத்துகள் உள்ளன. 414உள்ளாட்சி அமைப்புகள் 90 சதவிகிதத்திற் கும் அதிகமாக செலவு செய்தன. இதல், கிராமபஞ்சாயத்துகள் - 318, ஒன்றிய பஞ்சாயத்துகள் - 64, நகராட்சிகள் - 26, மாவட்ட பஞ்சாயத்துகள் – 6 இடம் பெற்றுள்ளன.சராசரி செலவினங்களின் சதவிகிதம்: பஞ்சாயத்துகள் - 99.72, ஒன்றிய பஞ்சாயத்துகள் - 101.04, மாவட்ட பஞ்சாயத்துகள் - 98.4, நகராட்சிகள் - 95.42,  மாநகராட்சிகள் - 72.79.மாவட்ட பஞ்சாயத்துகளில் கண்ணூரும், ஒன்றிய பஞ்சாயத்துகளில் ளாலம் (கோட்டயம்), பஞ்சாயத்துகளில் தகழி, மாநகராட்சிகளில் கண்ணூர், நகராட்சிகளில் ராமநட்டுக் கரா முன்னிலை வகிக்கின்றன.திட்ட செலவினங்களில் வரலாற்று சாதனை புரிந்ததைத் தொடர்ந்து, உள்ளாட்சிஅமைப்புகளும் இந்த நிதியாண்டுக்கான திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள் ளன. முதல் தவணையில் ரூ.2806 கோடியைஅரசு அனுமதித்துள்ளது. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1589 கோடியும், பராமரிப்பு நிதியிலிருந்து ரூ.1056 கோடியும், பொதுத் தேவை நிதியில் இருந்து முதல் மாதத்தில் ரூ.161 கோடியும் வழங்கப்பட்டது. 1157 உள்ளாட்சி அமைப்புகள் இந்த திட்டத்தை மாவட்ட திட்டக்குழுக்களுக்கு சமர்ப்பித்தன. 649 உள்ளாட்சி அமைப்புகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தன. இந்த திட்டங்கள்தான் செயல்படத் தொடங்கின.

நேரடியாக மக்களிடம்
திட்டச் செலவினங்களில் வரலாற்று சாதனைகளைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டு நேரடியாக திட்ட செயல்படுத்தலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவுகிறது. திட்ட ஒதுக்கீட்டில் ஒரு கணிசமான பகுதி கோவிட் காலத்தில் வேலை நாட்கள் மற்றும் பிற நிதிஉதவி வடிவத்தில் மக்களுக்கு சென்றது.கோவிட் தடுப்பு, நிவாரண நடவடிக்கைகள், சுபிக்ச கேரள திட்டத்தில் வேளாண் தலையீடு, பால் உற்பத்தி, வீட்டுவசதி போன்றவற்றில் தன்னிறைவு அடைவது போன்ற பல்வேறுதிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேம் பாட்டு நிதியை முழுமையாக செலவழித்த அமைப்புகளுக்கும் அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும்நகராட்சிகளுக்கு கூடுதல் உதவி வழங்கப் பட்டது.

;