states

img

அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதே வளர்ச்சி..... பினராயி விஜயன் பேச்சு...

திருவனந்தபுரம்:
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதாகும். இஜமுன்னணியின் மேம்பாட்டுக் கொள்கை சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான வளர்ச்சியாகும் என்றுமுதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள புத்தரிகண்டம் மைதானத்தில் நடந்த வளர்ச்சி முன்னேற்ற ஜாதாவின் நிறைவு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ஒவ்வொரு பகுதியையும் பார்த்தால், இங்கே  இதெல்லாம் நடக்காது என்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஒவ்வொரு  துறையிலும் நீங்கள் காணலாம். இதற்கு கேரள மக்கள் தான் காரணம் என்று அவர் கூறினார். கேரளத்தின் குடிமக்கள் கடந்த 5 ஆண்டுகளில் கேரளத்தின் அனைத்து சாதனைகளையும் நேரடியாகப் பெற்றவர்கள்.  கேரள மக்கள் அறிவார்ந்தவர்கள். நாட்டின் வளர்ச்சி தொடர்பான விசயங்களில் அரசாங்கம் சிறப்பாக எதையோ செய்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் அவர்களுக்கு இல்லை. காலத்துக்கேற்ற மாற்றங்கள் அவ்வப்போது  நடக்க வேண்டும் என்று மட்டுமே அரசாங்கம் கூறியது.

போக்குவரத்து நெரிசலால் சாலையில் மக்கள் அதிக நேரம் செலவிடுவது குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியிருந்தது. அதற்கு நிலம் கையகப்படுத்தல் மட்டுமே தீர்வாக இருந்தது. அதன் சிரமங்களை உணர்ந்து, நியாயமான இழப்பீடு மற்றும் தேவையான மறுவாழ்வு ஆகியவற்றை அரசு உறுதிசெய்தது. மக்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு அவர்கள் முழுமையாக ஒத்துழைத்தனர். இன்று, தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு நம்பத்தகாதது என்று யாராலும் சொல்ல முடியாது. கேரளத்தில் நடக்காது என்றே கருதப்பட்டது கெயில் இயற்கை எரிவாயுகுழாய் இணைப்பு. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு டன் அது நிறைவடைந்தது. இதைத்தான் நாம் பார்க்க வேண்டும். நாட்டை மாற்றுவதற்கு மக்களே முன்முயற்சி எடுத்தனர் என்று அவர் கூறினார்.

கிப்பி (கேரள உட்கட்டமைப்பு நிதி வாரியம்) மூலம் ரூ.50,000கோடி மதிப்புள்ள உட்கட்ட மைப்பை உருவாக்க முயற்சிப்ப தாக அரசு கூறிய போது  பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ.63,000 கோடிக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் அடிப்படை மேம்பாடு, சுகாதார வசதி மற்றும் சாலை ஆகியவற்றிற்காக கிப்பி பணம் திரட்டியது. அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக வேறுபடலாம். அவரவர்கள் தங்கள் சொந்த கொள்கையை பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் நிறைய செய்ய முயற்சித்தது. எந்தவொரு முயற்சியிலாவது எதிர்க்கட்சி ஆதரவாக இருந்ததுண்டா என்றும் முதல்வர் கேட்டார். நாட்டுக்கு நன்மை பயக்கும் யோசனையைக் கூட அவர்கள் கேலி செய்தனர். ஒவ்வொரு பிரச்சனையிலும் இதையே காண முடிந்தது.

கோவிட்டிலிருந்து நம் மக்கள் ஒற்றுமையாகவும், ஒருங்கிணைப்புடனும்  உயிர்வாழும் சக்தியை பெற்றனர். நாம் அதை எப்படி எதிர் கொண்டோம் என்பதல்ல, அதற்கு கிடைத்த நாட்டின்மறுமொழியை காணத் தவறாதீர்கள். கேரளம் டிஜிட்டல் கல்வியை சிறப்பாக கையாண்டிருப் பதை இந்தியா கண்டறிந்துள்ளது. இதற்கு ஒத்துழைத்த மக்களிடம் ஒரு தயவான வார்த்தை சொல்லஎதிர்க்கட்சியில் உள்ள எவரும் தயாரா? மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். இத்தகைய வளர்ச்சி எதுவும் இதற்கு முன் கனவுகூட கண்டிருக்க முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதாகும். எல்டிஎப் இன்மேம்பாட்டுக் கொள்கை சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான வளர்ச்சியாகும். வளர்ச்சியின் சுவையை அனைவரும் ருசிக்க முடியும் என்பதே இதன் பொருள். நாட்டின் நலன் என்பது தேசிய அக்கறைக்குரிய விசயம்.

இஜமு ஆட்சிக்கு வந்தபோது 18 மாத நல ஓய்வூதியம் நிலுவையில் இருந்தது. இதுதான் நிலைமை. இன்று அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் கிடைக்கிறது. பணமதிப்பு நீக்கப்பட்டபோது கூட்டுறவுத் துறையைஅழிக்க முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. ஆனால் நாடும் அரசாங்கமும் அணிதிரண்டபோது நம்மால் வெற்றிகரமாக கடக்க முடிந்தது. நாட்டின் பொருளாதார அமைப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது. பொதுத்துறைநிறுவனங்களை விற்று மத்திய அரசு பணம் சம்பாதித்து வருகிறது. ஆனால் கேரளா ஒரு நல்ல மாற்றை உருவாக்கியுள்ளது. பலதுயரங்களை எதிர்கொண்ட போதிலும், பொதுத்துறைகளை நாம் நன்றாக கையாண்டோம் என்று அவர் கூறினார்.

;