states

img

கேரளத்தில் ஊரடங்கு படிப்படியாக விலக்கல்... நெரிசல் கூடாது... கட்டுப்பாடுகள் அறிவிப்பு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் இரண்டாவது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மே 8 ஆம்தேதி தொடங்கிய முழுமையான ஊரடங்குமுடிவுக்கு வந்தது. குறைந்த அளவிலானபொதுப்போக்குவரத்து அனுமதிக்கப் பட்டுள்ளது. வியாழன் (ஜுன் 17) முதல் ஊரடங்கு விலக்கலில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று (ஜுன் 15) செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நோயின் அளவிற்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். நோய் பரவுவது 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைக்குள் மும்மடங்கு ஊரடங்கு இருக்கும். இரண்டாவது அலை மக்களின் ஒத்துழைப்பால் கட்டுப்படுத்தப்பட்டது. வேறு வழியில்லை என்பதால் அரசாங்கம் ஊரடங்கை கட்டாயப்படுத்தியது. மக்களின் அவல நிலையை புரிந்து கொண்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

நெரிசலை தவிர்த்திடுக!
 கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது நெரிசலைத் தவிர்க்க மக்களும் கடைக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். திருமணம் - இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதர கூட்டங்கள் அல்லது பொது நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.ஒன்றிய - மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் 25 சதவிகிதம் பேருடன்பணியாற்றும். ஐம்பது சதவிகித ஊழியர்கள்தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டும். புதன்கிழமைகளில், சராசரி நோய்பரவலை மதிப்பாய்வு செய்து ஒவ்வொருஉள்ளாட்சி பகுதியின் வகையையும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசோதனை இலக்கு தீர்மானிக்கப்படும்.

சலுகைகள், கட்டுப்பாடுகள்
மிதமான பொது போக்குவரத்துக்கு அனுமதி, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும். அகில இந்திய, மாநிலஅளவிலான பொதுத் தேர்வுகள் அனுமதிக்கப்படும். உணவகங்களில் இருந்து வீடுகளுக்குநேரடி உணவு விநியோகம், பார்சல் அனுமதிக்கப்படும். பெவ்கோ விற்பனைநிலையங் கள், பார்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை திறக்க அனுமதிக்கப்படும். செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். திங்கள்,புதன், வெள்ளிக்கிழமைகளில் பாதி அளவுஊழியர்களைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் இயங்கலாம். அரசு அச்சகம் செயல்பட அனுமதிக்கப்படும். பதிவு, பத்திரஎழுத்து அலுவலகங்கள் பகுதியளவில் செயல்படலாம். லாட்டரி விற்பனை அனுமதிக்கப்படும்.மால்கள் திறக்கப்படாது. சுற்றுலா, பொழுதுபோக்கு, நெரிசலான உள்ளரங்க நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.

;