states

img

அரசுப் பள்ளி ஆசிரியையான தமிழ்ப் பெண்ணுக்கு கேரள ஆளுநர் வாழ்த்து.... தேயிலைத்தோட்டத்தில் வேலை பார்த்து படித்தவர்...

நாகர்கோவில்:
தேயிலைத்தோட்டத்தில் வேலைப்பார்த்துக்கொண்டே படித்து, அரசு பள்ளி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ள தமிழ் பெண்ணுக்கு  கேரள ஆளுநர் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது குடும்பம் கேரளாவில் இடுக்கி மாவட்டம் சோற்றுப்பாறை பகுதியில் வசிக்கின்றனர். இங்கு  தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின்  மூத்த மகளான  செல்வ மாரி என்பவர் சிறுவயது முதலே ஏலத் தோட்டம், காபி தோட்டங்களில் வேலைப்பார்த்துக்கொண்டே படித்து வந்தார். தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் சென்றதால் வறுமையில் பரிதவித்த தாயும் மூன்று மகள்களும் கூலி வேலைகளுக்கு சென்றனர். மூன்று மகள்களும் பி. எட் படித்துள்ளனர். இதில் 28 வயதான செல்வமாரி,  எம். எஸ். சி, எம். எட்., எம்.பில் படித்துள்ளார்.  தற்போது ஆராய்ச்சிப் படிப்பும் படித்து வருகிறார். இதற்கிடையே  2017 ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு எழுதினார். தற்போது கேரள அரசால் இடுக்கி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியில்  நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகிவருகிறார். வறுமையிலும் தளராது படித்து அரசு ஆசிரியையாக பணியில் அமர்ந்துள்ள செல்வமாரி குறித்து அறிந்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் தனது ஆளுநர் மாளிகைக்கு செல்வமாரியை வரவழைத்து நேரில் வாழ்த்தி  பரிசும் வழங்கினார்.

;