states

img

கேரளத்தில் கெயில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.... அரசின் முக்கிய வாக்குறுதி நிறைவேறியது.... முதல்வர்

திருவனந்தபுரம்:
கெயில் இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம் எல்டிஎப் அரசு மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதியாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, கொச்சி-மங்களூர் இயற்கைஎரிவாயு குழாய் இணைப்பை காணொலி மூலம் தொடங்கி வைத்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: மக்களின்நியாயமான கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அரசாங்கம் அனைத்து தடைகளையும் சமாளித்தது. பிரச்சனைகள் காரணமாக 2014 ஆம் ஆண்டில் கெயில் குழாய்த்திட்டத்தின் அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டதை முதல்வர் நினைவு கூர்ந்தார். 450 கி.மீ நீளமுள்ள கொச்சி-மங்களூர் குழாய்த்திட்டத்தில் 414 கி.மீ. கேரளத்தில் உள்ளது. பெரிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது மக்கள்சிறிய சிரமங்களை எதிர்கொள்வது இயற்கையானது. ஆனால் சிரமங்கள் இருந்தபோதிலும், மக்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்தனர். ஏனென்றால், கேரளாவின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் அவசியம் என்பதைமக்களை நம்ப வைக்க அரசாங்கத்தால் முடிந்தது.

பல்வேறு வழக்குகள், ஏராளமான போராட்டங்களை எதிர்கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. அடர்த்தியான மக்கள் தொகைகொண்ட பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள், ஆறுகளின் கீழ் குழாய் பதிப்பது மிகப்பெரிய சவாலாகஇருந்தது. ஆனால் கெயில் அதிகாரிகள் இந்த திட்டத்தை முடிக்க உறுதியுடன் பணியாற்றினர். கெயில் அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். தடைகளை சமாளிக்க மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து செயல்பட்டன. பெருவெள்ளம், நிபா, கோவிட் தொற்றுநோய் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் இந்த திட்டத்தை முடிக்க அயராது உழைத்தனர். அவர்களுக்கும் வாழ்த்துகள்.குழாய் இணைப்பு நகரின் எரிவாயு விநியோகசங்கிலியை விரிவாக்க உதவும். இதன் மூலம்,உள்நாட்டு பயன்பாட்டிற்கான இயற்கை எரிவாயு கிடைப்பது அதிகரிக்கும். இந்த திட்டம்உண்மையான வளர்ச்சிக்கும், முன்மொழியப்பட்ட பெட்ரோ கெமிக்கல்ஸ் பூங்காவை அமைக்கவும் உதவும். இது எரிசக்தி துறையிலும் பெரும்வளர்ச்சியைக் கொண்டுவரும் என்று முதல்வர் கூறினார்.

முதல்வருக்கு மத்திய அரசு பாராட்டு
கெயில் குழாய் அமைப்பை நிறைவேற்ற கேரள முதல்வர் அளித்த ஆதரவுக்கு பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நன்றி தெரிவித்தார். முதல்வரின் ஆதரவு இல்லாமல் இந்த மெகா திட்டம் நிறைவேறி இருக்காது. கெயில் திட்டத்தை முடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிகள் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.கெயில் இயற்கை எரிவாயு திட்டத்தை நிறைவேற்றிய கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த திட்டம் இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். நாம் ஒன்றாக நின்றால் எதுவும் சாத்தியம் என்பதை திட்டத்தின் வெற்றி நிரூபிக்கிறது என்று நரேந்திர மோடி கூறினார்.இந்நிகழ்ச்சியில் வீடியோ மாநாடு மூலம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கர்நாடகஆளுநர் வஜுபாய் வாலா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

**************

வழிகாட்டும் கேரளம்

முந்தைய யுடிஎப் அரசால் கைவிட்ட இத்திட்டம் பினராயி விஜயன் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 2016 இல் புதுப்பிக்கப்பட்டது. இழப்பீடு இரட்டிப்பாகியது. மக்கள்தொகை கொண்ட பகுதிகள் முடிந்தவரை விலக்கப்பட்டன. மற்ற மாநிலங்களில், 30 மீட்டர் குழாய் இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இங்கே அது 20 மீட்டராக சுருக்கப்பட்டது. பின்னர் இது 10 மீட்டராக வரையறுக்கப்பட்டது. 10 சென்ட்டுக்கும் குறைவான நிலம் உள்ளவர்களுக்கு அதில் வீடு கட்ட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு நிவாரணமாக ரூ .5 லட்சமும் வழங்கப்பட்டது. பயிர்களுக்கு இழப்பீடு உயர்த்தப்பட்டது.நிலம் கையகப்படுத்தல், இழப்பீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர்வாசிகளின் கவலைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்ய அரசாங்கம் தொடர்ந்து தலையிட்டுள்ளது. திட்டத்தின் முன்னேற்றத்தை முதல்வர் நேரடியாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பீடு செய்தார். தடைகளை நீக்க அவரே தலையிட்டார். இதன் விளைவாக, முதல் 1,000 நாட்களில் 330 கி.மீ குழாய் பதிக்க அரசாங்க
த்தால் முடிந்தது. மற்ற மாநிலங்கள் வெற்றிகரமான கேரள மாதிரியில் முன்னேற முயற்சிக்கின்றன. கேரளாவில் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல வேறு எந்த மாநிலத்திற்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கவில்லை என்று கெயிலின் உயர் அதிகாரிகள் சாட்சியமளிக்கின்றனர்.

;