states

img

தொடரும் புயலின் விளைவுகள்.... கேரளத்தில் தீவிர எச்சரிக்கை.... படகு மூழ்கி தமிழக மீனவர்கள் 8 பேர் மாயம்....

திருவனந்தபுரம்:
அரபிக் கடலில் உருவான டவ் தே புயலின் போது கேரளத்தில் பலத்த மழை,காற்று மற்றும் கடற்கரைகளில் பேரழிவை ஏற்படுத்தின. ஒரு கடுமையான புயலாக மாநில கடற்கரை முழுவதும் சென்றது, ஆனால் அதன் அச்சுறுத்தல் குறையவில்லை. புயலின், பாதிப்பு ஞாயிறன்றும் தொடர்ந்தது. எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் இரண்டு பேர் நீரில் மூழ்கினர். லட்சத்தீவு அருகே கொச்சி கடற்கரையில் தமிழக மீன்பிடி படகு மூழ்கியதில் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேரளத்தில் குறைந்தது ஒன்பதுமாவட்டங்களில் வெள்ள அபாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக் கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.பல வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட் டன. சாலைகள் சீர்குலைந்துள்ளன. மரங்கள் பிடுங்கி வீசப்பட்டு வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. போக்குவரத்து தடையும் பரவலான பயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை தொடர்கிறது
இரண்டு நாட்களில் மாநிலத்தில் சராசரியாக 145.5 மி.மீ மழை பெய்தது.சனிக்கிழமை வரையிலான 24 மணிநேரத்தில், கொச்சி கடற்படைத் தளம்209 மி.மீ, பீர்மேடு 208 மி.மீ, கொடுங் கல்லூர் 200 மி.மீ, எர்ணாகுளம் தெற்கு 170.8 மி.மீ. மணிமலா மற்றும் அச்சன்கோவில் நதிகளில் வெள்ள அபாயங்கள் அதிகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 502 குடும்பங்களைச் சேர்ந்த 1934 பேர்68 நிவாரண முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். எர்ணாகுளம், இடுக்கி மற்றும்மலப்புரம் மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. கேரள கடற்கரையில் மீன்பிடி தடை தொடருகிறது..

குஜராத்தை தொடும்
டவ் தே புயல் செவ்வாயன்று பிற்பகல் குஜராத் கடற்கரை பகுதியை சென்றடையும் என தேசிய காலநிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப் ட்டுள்ளது. நிலச்சரிவு உட்பட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. போர்பந்தர், நலியா கடற்கரைகளை கடக்கும்போது புயல்175 கிமீ வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி விவரங்களின்படி, கோவா மாநிலத்தின் பனாஜிகடற்கரையிலிருந்து 250 கி.மீ தொலைவிலும், மும்பை கடற்கரையிலிருந்து 650 கி.மீ தூரத்திலும் புயல் காற்று வீசியது.

நீர் இருப்பு பாதியாக குறைப்பு
கல்லார்குட்டி, மூழியார் அணைகளில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது, மலங்கராஅணையில் இரண்டாம் கட்ட எச்சரிக்கை (ஆரஞ்சு எச்சரிக்கை) விடுக் கப்பட்டது. நெய்யார், குற்றியாடி, காராப்புழா, சிறுவாணி, கல்லடா, காஞ்சிராபுழா, பீச்சி, மணியார், பூதத்தான்கெட்டு, மூலத்தரா அணைகள் வரையறுக்கப்பட்ட அளவில் தண்ணீரை வெளியேற்றி வருகின்றன. இருப்பினும், மாநிலத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. கேஎஸ்இபி- யின் அணைகள் அவற்றின் சேமிப்புத்திறனில் 32 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

;