states

img

தி கேரளா ஸ்டோரி' படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப கடும் எதிர்ப்பு!

தூர்தர்ஷன் தொலைக்காட்சி, பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை இன்று ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
"அரசின் தேசிய தொலைக்காட்சியை பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக மாற்றக்கூடாது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்தக்கூடிய இந்த திரைப்படம் திரையிடப்படுவதைக் கைவிட வேண்டும்.  வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா உறுதியாக எதிர்க்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.