states

img

கேரளத்தில் கோவிட் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்... 2 நாளில் 2.5 லட்சம் பரிசோதனைகள்....

திருவனந்தபுரம்:
தேர்தலுக்குப் பிறகு கேரளத்தில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கே.கே.சைலாஜா தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் ஊடகங்களை சந்தி தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:  முதல்வர் தலைமையில் துறைசார் மட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மார்ச் மாதம் இறுதி வாக்கில் நாட்டில் கோவிட் தொற்றுஅதிகரிக்கத் தொடங்கியதை கூட்டம் மதிப்பீடு செய்தது என்று அமைச்சர் கூறினார். மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் நிலைமை சிக்கலானது. இந்த மாநிலங்கள் போதுமான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெறாத சூழ்நிலையை கடந்து செல்கின்றன என்று அமைச்சர் விளக்கினார்.

கேரளத்தில் இதுவரை 11,89,000 கோவிட் தொற்று பதிவாகியுள்ளன. ஒரு கோடியே 39 லட்சம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, 58,245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். வெள்ளியன்றும், சனியன்றும் சுமார் 2.5 லட்சம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முடிவு ஞாயிறன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துல்லியமான வழிமுறைகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
 

;