states

img

தடுப்பூசிக்கான தொகை முதல்வர் நிவாரண நிதிக்கு கேரளத்தில் சமூக ஊடகங்களில் பெருகும் ஆதரவு....

திருவனந்தபுரம்:
‘நானும் எனது குடும்பத்தினரும் கோவிட் தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொண்டோம், முதல்வரின் பேரிடர் நிவாரணத்திற்கு நிதி அளித்தோம்’ என்பதை  மத்தியஅரசின் கொள்கைக்கு எதிரான பிரச்சாரமாக கேரளத்தில் சமூக ஊடகங்களில் நடந்துவரும் முன்னெடுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கோவிட் தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக,கேரளத்தில் அனைவருக்கும் இலவசமாகதடுப்பூசி வழங்கப்படும் என்றும் முதல்வர்பினராயி விஜயன் புதனன்று தெரிவித்திருந்தார். முதல்வரின் அறிவிப்புக்கு  கேரளத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மாநில அரசு வழங்கும் இலவச தடுப்பூசிகளைப் பெறுபவர்கள், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அத்தொகையை அளிப்பார்கள். ‘நானும் எனது குடும்பத்தினரும் கோவிட் தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொண்டோம், முதல்வரின் பேரிடர் நிவாரணத்திற்கு நிதி அளித்தோம்’ என தொகையை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் அம்மாநில மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தடுப்பூசி சவால் ஹேஷ்டேக்
கேரளத்தில் இரண்டு இலவச டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதன் மதிப்பு ரூ .800 ஆகும். இந்த தொகையை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதே பிரச்சாரத்தின் நோக்கமாகும். பல பெயர்கள் ஏற்கனவே இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ‘தடுப்பூசி சவால்’ என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வியாழனன்று (ஏப்.22) மதியம் 1 மணி நிலவரப்படி, முதல்வரின் நிவாரண நிதி ரூ.9.48 லட்சத்தை எட்டியுள்ளது.ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150 இல் கிடைக்கும். ஆனால் மாநிலங்கள் ரூ.400 செலுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600. சந்தையில் போட்டி தீவிரமடையும்போது, அது இன்னும் அதிகரிக்கும். இந்த சூழலில், தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயிவிஜயன் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். அவ்வப்போது வார்த்தையை மாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்றும் முதல்வர் கூறினார்.

இதைத் தொடர்ந்து முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப சமூக ஊடகங்களில் ஒரு சவால் ஏற்பட்டது. அனுபமா மோகன் என்கிற பத்திரிகையாளர் முகநூல் பதிவில், எந்தவொரு சிரமமும் இல்லாமல் தடுப்பூசிக்கு பணம் செலுத்துவதற்கான வாழ்க்கைத் தரம் தன்னிடம் உள்ளது, எனவே நானும் எனது குடும்பத்தினரும் தடுப்பூசிக்கு செலுத்த வேண்டியிருக்கும் தொகையும், சாத்தியமான அளவில் மற்ற நபர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தொகையும் வரும் மாதங்களில் சிஎம்டிஆர்எப்-க்கு செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்குவதற்கான தனதுபொறுப்பை கைவிட்டு தனியார்நிறுவனங்களுக்கும் மருத்துவமனை களுக்கும் லாபம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பதை முன்வைத்தேசமூக ஊடக பதிவுகள் குற்றம்சாட்டுகின்றன. தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிட மிருந்து மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாகும்.  இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ‘தடுப்பூசி வாங்க மாநிலங்களுக்கிடையே உருவாகும் போட்டியை பயன்படுத்தி மருந்து கம்பெனிகள் விலையை அதிகரிக்கவே மத்திய அரசின் முடிவு உதவும். இதன் மூலம் வருவாய் குறைவான மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலையே ஏற்படும் என தெரிவித்தார்.

;