states

img

யுஏஇ தூதர், அட்டாசே மீது குற்றச்சாட்டு.... தங்க கடத்தலில் நோட்டீஸ் அனுப்ப சுங்கத்துறை முடிவு....

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் யுஏஇ தூதர் ஜலால் ஹுசைன் அல்ஸாபி, முன்னாள் அட்டாசே ராஷித் காமிஸ்அலி ஆகியோரை குற்றவாளிகளாக இணைக்க வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி தூதருக்கும்அட்டாசேக்கும் சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. இருவரிடமிருந்தும் வாக்குமூலம் பெற முடியாத நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில்தான் சுங்கத்துறைக்கு இந்த அனுமதியை அளித்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே இருவரிடமிருந்தும் வாக்குமூலம்பெறவும், குற்றவாளிகளாக இணைக்கவும் விண்ணப்பித்திருந்தது. தங்கம் பிடிபட்ட பிறகு உடனடியாக இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறினர். தூதருக்கு வந்த அரசு முக்கியத்துவமும் பாதுகாப்பும் பெற்ற பெட்டிகளில் தங்கம் கடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

;