states

img

கொச்சி துறைமுகத்தில் ரூ 7.5 கோடி தங்க வேட்டை.... குளிர்சாதன பெட்டியின் உள்ளே 14 கிலோ தங்கம்...

கொச்சி:
கொச்சி துறைமுகத்தில் இருந்து ரூ .7.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளது. பிஸ்கட் வடிவில் மொத்தம் 14.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மலப்புரத்தைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செவ்வாயன்று கொச்சி துறைமுகத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 தங்க பிஸ்கட்டுகள் கிடைத்தன. தங்கம்கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் டிஆர்ஐ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விமான நிலையங்களில் பரிசோதனைவலுப்படுத்தப்பட்டுள்ளதால் துறைமுகத்தின் வழியாக தங்கம் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற தகவலின்அடிப்படையில் டிஆர்ஐ இந்த சோதனை மேற்கொண்டது.

ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சரக்கு துறைமுகத்திற்கு வந்துள்ளது. அதை வாங்க வந்தபோது மலப்புரத்தைச் சேர்ந்தவர்  கைது செய்யப்பட்டார். அவர் விசாரிக்கப்படுகிறார். தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வதாகவும், இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் புதன்கிழமை எர்ணாகுளம் ஏசிஜேஎம் (பொருளாதார குற்றங்கள்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

;