states

img

கேரளாவில் 33 பேர் மீட்பு

திருவனந்தபுரம், அக்.17- கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக இடுக்கி,  கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழை-நிலச்சரிவால் சனிக்கிழமை இரவு முதல் 19 பேர்  உயிரிழந்துள்ளனர். கோட்டயத்தில் 13 பேரும், இடுக்கியில் 6 பேரும் உயிரிழந்தனர். கோட்டயத்தில் குறைந்தது 12 பேர் காணாமல் போயினர். இவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட் டன. காணாமல் போனவர் பட்டியலில் இல்லாத மற்றொரு வர் உடலும் மீட்கப்பட்டது. இவர்களது உடல்கள் உடற்கூராய்விற்கு அனுப்பபட்டுள்ளன. வேறு யாரேனும் காணாமல் போனார்களா என்பது குறித்து தகவல்  இல்லை. ஞாயிறு மாலை நான்கு மணி வரை நிலைமை  சீராக உள்ளது. இரவு மழை பெய்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ கூறினார். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் கேரளா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டு பெண்கள்,  ஏழு குழந்தைகள் உட்பட 33 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

;