states

img

குஜராத்தில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மையங்கள் இல்லை - உயர்நீதிமன்றம் 

குஜராத் மாநிலத்திலுள்ள கிராமங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் இல்லை என்று  அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 34 வெண்டிலேட்டர்கள் குப்பை வண்டியில் வைத்து  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் குஜராத்தில் ஆர்டி பிசிஆர் கிட்டுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது.  இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது,
கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்துகொள்ள 3-5 நாள்கள் ஆகின்றன. ஆனால்,ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் மாதிரிகளை சேகரிப்பதும், பரிசோதனையும் துரிதமாக நடைபெறும்.  சில மணி நேரங்களிலேயே கொரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள இயலும்.
இந்நிலையில் குஜராத்தில் 27 ஆயிரம் ரெம்டெசிவிர் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பயன்படுத்தாதவை எத்தனை என்பதை கண்டறிய வேண்டும். கொரோனா மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஏன் பயன்படுத்தவில்லை. கொரோனாவிற்கான ஊசிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை மாநில அரசு கவனிக்க வேண்டும்.
மருத்துவமனையில் படுக்கைகளும், ஆக்ஸிஜனும் போதிய அளவில் உள்ளது எனில், மக்கள் ஏன் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

;