states

img

குஜராத்தில் பேருந்து மீது கார் மோதி விபத்து - 9 பேர் பலி

குஜராத்தின் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.
குஜராத்தில் ஆமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில், நவ்சரி மாவட்டம் வெஸ்மா கிராமத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4 மணியளவில் பேருந்து மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.