states

img

பெங்களூரு: மேற்கு மண்டலத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 பேருக்கு பக்க விளைவு

பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் மற்ற மண்டலங்களை விட மேற்கு மண்டலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அதிக பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடல் நல பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஐ தாண்டாத நிலையில் மேற்கு மண்டலத்தில் மட்டும் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து மேற்கு மண்டல சுகாதாரத்துறை அதிகாரி மனோரஞ்சன் ஹெக்டே கூறியிருப்பதாவது: உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு பதற்றம் காய்ச்சல், உடல்வெப்பநிலை குறைவு, வலி போன்றவை உணரப்பட்டுள்ளது. ஆளால் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தலைவலிக்கு மட்டும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். 
அதேபோல் தெற்கு மண்டலத்தில் மட்டும் ஒரே ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சற்று நேரத்தில் அவர் சரியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

;