states

img

உத்தர்கண்ட் வெள்ளம் : பலி 64 ஆனது

டேராடூன், அக்.21- உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம்-நிலச்சரிவில் வியாழக்கிழமை மாலை வரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.  11-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. அதிகபட்சமாக நைனிடாலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம்-நிலச்சரிவால் ரூ.7,000 கோடி  சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் புஷ்கர் டாமி தெரிவித்துள்ளார். 2013 ஜூலை 16-ஆம் தேதி பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத் தால்  5,700 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதற்குப் பின்னர் உத்தர்கண்ட் மாநிலம் பெரும் வெள்ளத்தை 2021-அக்டோபரில் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில்  கனமழை தொடர்கிறது. 2021-அக்டோபர் 1-ஆம்  தேதி (வியாழக்கிழமை) மாலை நான்கு மணி நிலவரப்படி உயிரி ழந்தோர் எண்ணிக்கை  64 ஆக அதிகரித்துள்ளது. 19 பேர் காய மடைந்தனர் மற்றும் ஐந்து பேரை  காணவில்லை. வியாழக்கிழமை  நைனிடால், ஹல்ட்வானி, கத்கோடம், ராணிகேத், பவுரி, லான்ஸ்டவுன் மற்றும் சாமோலி ஆகிய பகுதிகள் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடை ந்துள்ளன. இந்தப்பகுதிகளிலிருந்து மாநிலத்தின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள்,  ரயில் தண்டவாளங்கள் பல இடங் களில் சேதமடைந்துள்ளன. சாலைப் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. கத்கோடத்தில், ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

தொலைதூரப் பகுதிகள்,  கிரா மங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலாத் தலமான நைனிடால்,  மிக மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  நைனி ஏரி பகுதியில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரண மாக, நைனிடாலில் உள்ள தோபி காட்டைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  மற்றொரு சம்பவத்தில், ஹர்சில்-சிட்குல் மலையேற்றத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 11 மலை யேற்ற வீரர்கள் காணாமல்போயினர். உத்தர்கண்டில் பல இடங்களில் சுற்று லாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. மோகன் மற்றும் திக்குலி பகுதிகளில் உள்ள பல  ரிசார்ட்டுகள் முற்றிலும் வெள்ளத் தில் மூழ்கியுள்ளன. பல மணி நேர  நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சி களுக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் மோகனில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் இருந்து 150 சுற்றுலாப் பயணிகளை மீட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த 96 பேர் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்  உத்தர்கண்டில் சிக்கியுள்ளனர். அவர்களில் 92 பேர் பாதுகாப்பாக இருப்பதாக கர்நாடக மாநில பேரி டர் மேலாண்மை ஆணையர் மனோஜ்ராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்றுபேர் பத்திரிநாத்தில் படுகாயமடைந்துள்ளனர் என பிடிஐ தெரிவிக்கிறது.

உத்தர்கண்ட் முழுவதும் வானி லை சீரானதால், கேதார்நாத், கங்கோ த்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரை புதன்கிழமை தொடங்கியது. பிபால்கோடி-ஜோஷிநாத்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில்  நிலச்சரிவு காரணமாக பல இடங் களில் தடை ஏற்பட்டுள்ளதால் பத்ரி நாத் யாத்திரையை மீண்டும் தொடங்க முடியவில்லை என்று சார்தாம் தேவஸ்தான வாரிய ஊடக பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறி னார். அல்மோரா, பவுரி, சம்பவாத், பீம்தால், பித்தோராகர், பாகேஸ்வர் போன்ற மாவட்டங்களில் மழைக்கு உயிரிழந்ததாக தவல்கள் தெரிவிக் கின்றன.  இறந்தவர்களின் குடும்பத் திற்கு மாநில அரசு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.  உத்தர்கண்டில் உள்ள உதாம் சிங் நகர் மற்றும் நைனிடால் மாவட்டங் களில் இருந்து இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப் பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மாநி லத்தின் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மீட்புக்குழுவினர் நிவா ரணப் பொருட்களை வழங்கினர். உத்தர்கண்ட் மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 17 அணிகள்  அங்கு முகாமிட்டுள்ளன. மூன்று நாட்களாக இடைவிடா மல் பெய்து வரும் மழையால் 7,000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் புஷ்கர் டாமி பந்த்நகர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை உத்தர் கண்டின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு மேற்கொண்டார்.

;