states

img

உத்தரகாண்ட்:  பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவு

பொதுவாக 7 ஆண்டுகளுக்கு தகவல் இன்றி இருந்தால் மட்டுமே இறந்துவிட்டதாக கருதப்படும் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும்  உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 
 உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி பனிப்பாறை பெயர்ந்ததால் எதிர்பாராத விதமாக பெரும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தபோவன் பகுதி தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டனர்.  தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 206 பேரில் 70  பேரின்  உடல்கள் மீட்கப்பட்டது. 29 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. எஞ்சிய 136 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. 
 

;