states

img

அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா!

அரியானாவில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றதால், அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரியானாவில் ஆளும் பாஜக மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, மொத்த அமைச்சரவையும் பதவியை ராஜினாமா செய்தது. இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யபட்டுள்ளார்.