states

img

பாஜக முதல்வருக்கு மாட்டிறைச்சியை பரிசளிப்பதாக கூறிய பெண் கைது... மத மோதலைத் தூண்டுவதாக அசாம் காவல்துறை நடவடிக்கை....

கவுகாத்தி:
அசாமில் சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டுசெல்வதற்கும், மாட்டிறைச்சி விற்பனையை மேற்கொள் வதற்கும் தடை விதித்து, ‘அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவை’, அங்குள்ள பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த மசோதாவின்படி இந்து,சமண, சீக்கியர் மற்றும் பிற மாட்டிறைச்சி சாப்பிடாத சமூகங்கள் வசிக்கும்பகுதிகள் மற்றும் கோவில்களை ஒட்டிய 5 கி.மீ. சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதும், வாங்கப்படுவதும் கூடாது.இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தாலும், இஸ்லாமியர்களைக்குறி வைத்து இந்த மசோதாவைஅங்குள்ள ஹிமந்தா பிஸ்வாசர்மா அரசு கொண்டுவந்தது. சில நாட்களுக்கு முன்பு பக்ரீத் கொண்டாடப் பட்ட போது, இந்தச் சட்டம் மிகக்கடுமையாகவே அமல்படுத்தப்பட்டது. அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன.இதனால் வெறுத்துப்போன, அசாமின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பக்ரீத் பண்டிகையையொட்டி, மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு மாட்டிறைச்சி உணவைப் பரிசளிப்பதாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டார். இறந்துபோன மாட்டின் படத்தையும் அவர் பதிவேற்றி இருந்தார். பாஜக அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக அவர் இவ்வாறு செய்திருந்தார்.

ஆனால், இதனையே சாக்காகஎடுத்துக் கொண்ட, விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பு, சம்பந்தப்பட்ட பெண் இரு சமூகங்களுக்கு இடையேவகுப்புவாத பிரச்சனையைத் தூண்டுவதாகக் கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்தது. ஆளும் பாஜக அரசின் காவல்துறையும் சம்பந்தப்பட்ட பெண்ணை உடனடியாகக் கைது செய்து, தங்களின் கடமையை நிறைவேற்றியது. எனினும், அவர் மீதான குற்றச்சாட்டு சாதாரண சட்டப் பிரிவுகளில் வரக்கூடியது என்பதால், வேறுவழியில்லாமல் அவரை ஜாமீனிலும் விடுவித்துள்ளது.குற்றம்சாட்டப்பட்ட பெண், பாஜகசிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவரின் மகள் என்பது குறிப்பிடத் தக்கது.

;