states

img

முஸ்லிம்கள் மட்டும்தான் அதிக குழந்தைகள் பெறுகிறார்களா? 6 பேருடன் பிறந்த அசாம் முதல்வருக்கு குடும்பக் கட்டுப்பாடு பொருந்தாதா?

திஸ்பூர்:
இஸ்லாமியர்கள் குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதற்கு கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.

அசாம் மாநில புதிய பாஜக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனக்குநடத்தப்பட்ட பாராட்டு விழாவில்பேசும்போது, “ மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு அரசுக்கு மிகவும் தேவையாக உள்ளது. எனவேகண்ணியமான குடும்ப கட்டுப்பாடு முறைகளைச் சிறுபான்மையினர் கடைப்பிடிக்க வேண்டும்” என்று மக்கள் தொகை அதிகரிப்புக்கு முழுக்க முழுக்க முஸ் லிம்களே காரணம் என்பது போலபழியைத் தூக்கிப் போட்டிருந் தார். இதற்குத்தான் அசாம் மாநிலத்தில் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“எங்களுக்கும் பெரிய குடும்பத்தினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி நன்கு தெரியும். எங்களுக்குயாரும், இதுகுறித்து உபதேசிக்கவேண்டாம்” என்று இஸ்லாமிய வழக்கறிஞரான ஹபீஸ் ரஷித்சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். “அசாமில் இஸ்லாமியர்கள்மட்டுமின்றி, பல்வேறு இனத்தவருமே அதிக குழந்தைகள் பெற்றுள்ளனர்” என்று அசாம் மாநிலசிறுபான்மை மாணவர் சங்க முன்னாள் தலைவர் ரைஜோர் தல்பதில் அளித்துள்ளார். சட்டப் பேரவை உறுப்பினரான ரபிகுல்,ஒருபடி மேலே சென்று “முதல்வர்தனது குடும்ப கட்டுப்பாட்டுக் கருத்து மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டுமே குற்றம் சாட்டுகிறார். முதல்வருக்கு 6 சகோதரர்கள் உள்ளபோது அவர் மற்றவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றி உபதேசிக்க வேண்டாம்” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.அசாம் மாநில மக்கள் தொகையில் 31 சதவிகிதம் பேர்- அதாவது3.12 கோடி பேர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;