states

img

அசாம் மிசோரம் எல்லை விவகாரம்: 5 பேர் பலி

அசாம் மிசோரம் மாநிலங்களின் எல்லையில் இரு தரப்பினரிடையே திங்களன்று ஏற்பட்ட மோதலின்போது அசாம் காவலர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே கொலாசிப் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை அசாம் காவல்துறையினர் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த ஜூன் 30ம் தேதி மிஸோரம் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்- அதேசமயம் அசாமின் ஹைலகண்டி பகுதிக்கு உட்பட்ட 10 கிலோ மீட்டர் பகுதியை மிஸோரம் ஆக்கிரமித்துள்ளதாக அசாம் அதிகாரிகளும் எம்எல்ஏக்களும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 
இந்நிலையில் மிசோரம் பகுதியிலிருந்து வெளியேற அஸ்ஸாம் காவல்துறையினர் மறுத்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மிஸோரம் எல்லை கிராம மக்களும் காவல்துறையினரும் அஸ்ஸாம் எல்லை கிராம மக்கள்மீது தாக்குதல் நடத்தினர். அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாபூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் கடைகளுக்கு கடந்த சனிக்கிழமை தீ வைத்தனர்.  இதனால் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
முன்னதாக இந்த விவகாரம் குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது
எல்லை மோதலில் அசாம் காவலர்கள் 6 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

;