states

img

உ.பி-யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல் - 7 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரரை கடுமையாக தாக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் ரயில் நிலையத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) வீரர் மீது கண்மூடித் தனமான தாக்குதல் நடத்திய கன்வாரியாக்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிக்கெட் வாங்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த காவி உடை அணிந்த சிலர், சி.ஆர்.பி.எஃப் வீரரை கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.