தெலுங்கானா ஆளுநராக சிவ் பிரதாப் சுக்லா பதவியேற்றார்.
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் கடந்த மார்ச் 5-ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டாா். தமிழ்நாட்டின் ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என்றும், தெலுங்கானா ஆளுநராக சிவ் பிரதாப் சுக்லாவை நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக சிவ் பிரதாப் சுக்லா இன்று பதவியேற்றுக்கொண்டார். லோக் பவனில் தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர் கதம் பிரசாத் குமார், சட்டப் பேரவைத் தலைவர் குத்தா சுகேந்தர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.