பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தல்டி கிராமத்தில் செயில் (SAIL) மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராக சிஐடியு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தல்டி மைனில் சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தும், சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களின் 12 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.