states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தேர்தல் முறைகேடுகளை மறைக்கவே சம்ப லில் கலவரம் தூண்டப்பட்டது. 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கதவுகளைத் திறந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பின் விளைவே சம்பல் கலவரம் ஆகும்.

இனிமேல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவது நல்லது அல்ல. வாக்குச் சீட்டு மூலமாக தேர்தல் நடத்துவது தான் நல்லது. வரும் காலங்களில் வாக்குச் சீட்டு தேர்தல் முறைக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும்.

வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சு பேசுபவர் மீது வழக்கு இல்லை. ஆனால் வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசுகிறார் என பதிவிடுபவரின் (முகமது ஜுபையர்) மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இது ஒரு கொடுங்காலம்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டை எதிர்க்கட்சிகளின் வேலையை பார்க்கச் சொல்லி இந்திய மக்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் அரசியல் அமைப்பின் வேலையையாவது அவர் பார்த்திருக்கலாம்.

பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் கொள்ளுப் பேரன் மங்கள் முண்டா (45), சாலை விபத்தில் காயமடைந்து ஜார்க் கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பால் மங்கள் முண்டா உயிரிழந்தார். அவரது உடலுக்கு “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கர்நாடகாவில் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா மனு அளித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகி உள்ளதாக ஒன்றிய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட வியா தகவல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாடகை தாயாக இருப்பதற்கு ஒப்புக் ்கொண்டு சென்ற 25 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

“முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும்” என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவின் விஸ்வ வொக்கலிகா மகா சமஸ்தான மடத்தின் குமார சந்திரசேகரநாத சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் கந்துவா மாவட்டத்தில் நடந்த தீபம் ஏற்றல் நடந்த விழாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். 

அரபிக்கடலில் 500 கிலோ கிரிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய மற்றும் இலங்கை கடற்படை யினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து போ தைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.