காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவராக சௌமித்ர குமார் ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தாரை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இவர் அடுத்த 5 ஆண்டுகள் முழுநேர தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சௌமித்ரா குமார் ஹல்தார் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.