போபாலில் உள்ள பி.எம் ஸ்ரீ பள்ளி வகுப்பறையில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 2 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பி.எம் ஸ்ரீ பள்ளியில், கடந்த 18-ஆம் தேதி அன்று, ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 மாணவிகள் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பள்ளியின் நிலை குறித்து ஏற்கனவே அம்மாநில அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.