states

img

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்து - 25 பேர் உயிரிழப்பு

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் சுற்றுலாப் பயணிகள், 14 பேர் விடுதி ஊழியர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதை தொடர்ந்து, கேளிக்கை விடுதியின் உரிமையாளர் மற்றும் பொது மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை பொது மேலாளர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.