states

img

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு உற்பத்தித் துறைகளில் வெளியேற்றப்படும் இளைஞர்கள்

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு உற்பத்தித் துறைகளில் வெளியேற்றப்படும் இளைஞர்கள்]

புதுதில்லி  2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான 2025 ஜூலை – செப்டம்பர் வரையிலான காலத்தில் வேலையின்மை அதி கரித்துள்ளது அரசு தரவுகளின்படி தெரியவந்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் ஏற்பட்டு  வரும் வீழ்ச்சியின் காரணமாக ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் வேலையை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். தரவுகளின்படி, 15 முதல் 29 வய துடைய இளைஞர்களிடையே  வேலையின்மை விகிதமானது 14.6 சதவீதத்திலிருந்து 14.8 சதவீத மாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை  பல நிறுவனங்களில் நடை பெற்று வரும் தொடர் பணிநீக்கங் கள், காலிப்பணியிடங்களை நிரப் பாமல் குறைந்த பணியாளர்கள் மூலமாக அதிக வேலைகளை செய்ய வைத்து  லாபம் குவிக்கும்  நடவடிக்கைகள் நடந்து வரு கின்றன. இந்நிலையில் உயர்கல்வி  படித்த இளைஞர்களுக்கு நக ரங்களில் வேலை தேடும் போது  வேலை கிடைக்காமல் பல  சிர மங்களை எதிர்கொண்டு வருகின்ற னர். இது நகர்ப்புற வேலையின்மை  ஒரு முக்கிய அழுத்தப் புள்ளியைக்  காட்டுகிறது என தெரிவிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக இரண்டு காலாண்டு களுக்கு இடையில் நகர்ப்புறங்க ளில் வேலையின்மை விகிதமானது  17.9 சதவீதத்திலிருந்து 18.4 சதவீத மாக உயர்ந்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பை  பாஜக அரசு  முடக்கி வருகிறது.  புதிய வேலைகள் உருவாக வில்லை. இதனால் கிராமப்புற வேலையின்மை 13.1 சதவீதமாக உள்ளது. ஒன்பது மாநிலங்கள்  இந்த வேலையின்மையில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் மோசமாக உள்ளன. உத்தரகண்ட் மாநிலம் 14.9 சதவீத வேலையின்மையுடன் முதல் இடத்தில் உள்ளது. இதன் பின்  இமாச்சலப் பிரதேசம் 4.3 சத வீதம், ஜம்மு - காஷ்மீர் 3.5 சத வீதம்,  உத்தரப் பிரதேசம் 2.7 சத வீதம், தமிழ்நாடு 2.1 சதவீத வேலை யின்மையுடன் உள்ளன.  இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு வது ஒரு சவாலாக உள்ளது என வும் கூறப்படுகிறது.  இதே காலகட்டத்தில், உற்பத்தி  மற்றும் சுரங்கத் துறையில் வேலை வாய்ப்பு உருவாகும் அளவானது 26.6 சதவீதத்திலிருந்து 24.2 சதவீத மாக குறைந்தது. சேவைத் துறையும் 33.9 சதவீதத்திலிருந்து 33.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையிலிருந்து விவசாயத்திற்கு  வேலைவாய்ப்புப் பங்கீடு  குறித்தான தரவுகள் இந்தியா தொழில்மயமாக்கல், உற்பத்தி யை அதிகரிப்பது என்ற இலக்கி லிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகின்றது. வேலைவாய்ப்பில் விவசாயத் துறையின் பங்கு 39.5 சதவீதத்திலிருந்து 42.4 சதவீத மாக உயர்ந்துள்ளது. இது வேலை யின்மை காரணமாக இளைஞர்கள் (தொழிலாளர் சக்தி) விவசாயத் துறைக்கே மீண்டும்  திரும்பிச் சென்றுள்ளதைக் காட்டுகிறது.  வேளாண்மை அல்லாத துறை கள் போதுமான வேலைகளை உரு வாக்கத் தவறியதால், இரண்டாம்  நிலை மற்றும் மூன்றாம் நிலைத்  துறைகளை விட்டு வெளி யேற்றப்படும்  தொழிலாளர்களை  விவசாயத் துறை கட்டாயமாக உள்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப் பட்டுள்ளது. எனினும் பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு மற்றும் பல மாநில அரசுகள் விவசாயிகள்,  விவசாயத்  தொழிலாளர்களை பாதுகாத்து அத்துறையை மேம் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை, பல மாநி லங்களில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில் அடிப்படை ஆதரவு விலை உயர்த்  தப்படவில்லை. இதுபோன்ற சூழல்கள் அவர்  களை மேலும் வறுமை, பொருளா தார நெருக்கடி  உள்ளிட்ட துன்  பத்திற்குள் தள்ளும் என எச்ச ரிக்கையும் விடப்பட்டுள்ளது.  மாநிலங்களில் உற்பத்தித் தொழில் வீழ்ச்சி மாநில அளவிலான உற்பத்தித்  துறையும் வீழ்ச்சியை சந்தித்துள் ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநி லத்தில் உற்பத்தி சார்ந்த வேலை கள் 12.4 சதவீதமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. ஒடிசா வில் 9 சதவீதம் சரிந்துள்ளது. தொழில் துறைக்குப் பெயர் பெற்ற தாகக் கூறப்பட்ட ஆந்திரப் பிர தேசம் 7.5 சதவீதம், தெலுங்கானா 6.9 சதவீதம் என  சரிவு ஏற்பட்டுள் ளது. முக்கிய மாநிலங்களில் தொழில் வேலைவாய்ப்பில் ஏற்  பட்டுள்ள இந்தச் சரிவு தொழிற் சாலை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மந்தநிலையையும், நகர்ப்புற இளைஞர் வேலையின்மை மோச மடைந்து வருவதையும் காட்டு கிறது என பொருளாதார நிபுணர் கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்படும் இந்திய பெண்கள்

 பெண்கள் தங்கள் மீதான சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தை உடைப்பதற்கு பொருளாதார சுதந்திரம் மிக அடிப்படை யாகும். ஆனால் தற்போது இந்தியா முழுவதும் பெண்கள் வேலை யின்மையால் கடும்பாதிப்பை சந்தித்துள்ளனர்.  2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உத்தர கண்டில் வேலையின்மை 9.5 சதவீதத்திலிருந்து 23.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. பீகாரில் 12.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீத மாகவும், ஹிமாச்சலில் 34.3 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக வும் தமிழ் நாட்டில் 18.5 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகவும் பெண்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது.