states

img

பொய்ப் பிரச்சாரம் மூலம் கேரள மக்களை விலைக்கு வாங்க முடியாது

பொய்ப் பிரச்சாரம் மூலம் கேரள மக்களை விலைக்கு வாங்க முடியாது தெலுங்கானா முதலமைச்சருக்கு பி.வெங்கட் சவால்

மாண்டியா தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக ரேவந்த் ரெட்டி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி ஆளும் கேரள மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி தனது அரசு கஜானாவிலிருந்து பல  கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை எடுத்து, கேரள மலையாள நாளி தழ்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆத ரவாக உண்மைக்கு மாறான போலி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட், கர்நா டக மாநிலம் மாண்டியாவில் நடை பெற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பிரம்மாண்ட பேரணியில் பேசுகையில், “தெலுங்கானாவில் நிறைவேற்றப்படாத திட்டங்களை முன்வைத்து பொய்களைப் பரப்பி, கேரள மக்களைத் திசைதிருப்ப காங்கிரஸ் அரசு முயல்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு தெலுங்கானா மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. தெலுங்கானா அரசு வெளியிடும் விளம்பரங்கள் அரசியல் ரீதியான ஒரு “அவதூறு பிரச்சாரம்” ஆகும். கார்ப்பரேட் நலனும் மக்கள் நலனும் தெலுங்கானாவின் கார்ப்ப ரேட் ஆதரவு காங்கிரஸ் அரசுக்கும் கேரளாவின் மக்கள் நல இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் இடையே “மலைக்கும் மடுவுக் கும்” உள்ள வித்தியாசம் நிலவு கிறது. உண்மையில் தெலுங்கானா காங்கிரஸ் அரசு உழைக்கும் வர்க்கத்திற்கு அளித்த அடிப்படை வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. முதியோர்களுக்கு அறிவிக்கப்பட்ட மாதம் ரூ. 4,000 ஓய்வூதியம்; வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் வாக்குறுதி முழுமையாகக் கைவிடப்பட்டுள் ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஐந்து தவணை நிதி யுதவியில், மூன்று தவணைகள் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. விவசாயத் தொழிலா ளர்களுக்கான ‘கூலி பந்து’ திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெறும் கணக்கெடுப்பு என்ற பெயரிலேயே முடக்கப்பட்டுள் ளது. தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் போய்ச் சேரவில்லை. புல்டோசர் தெலுங்கானாவின் கம்மம் பகு தியில் ஏழைகளின் குடியிருப்பு களை இடிக்க காங்கிரஸ் அரசு புல்டோசர்களைப் பயன்படுத்தி யது. அதே வேளையில் கேரளா வின் இடது ஜனநாயக முன்னணி அரசு 5 லட்சம் நிரந்தர வீடுகளை கட்டி, ஒரே நாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் ‘கிரஹப்பிர வேசம்’ நடத்தி சாதனை படைத்தது. சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்பு கேரள இடதுசாரி அரசு, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் களைக் கோவில் அர்ச்சகர்களாக நியமித்ததன் மூலம் பல நூற்றாண்டுகால சாதிப் பாகு பாட்டிற்குப் பெரிய அடி கொடுத்துள் ளது. இது பாராட்டுக்குரியது. ஆனால் தெலுங்கானாவின் நாகர்க ர்னூலில் ஒரு தலித் குழந்தையின் மரணத்தில் தொடர்புடைய ஆதிக்க சாதியினரைப் பாதுகாக்க அரசு இயந்திரம் குற்றவியல் அலட்சி யத்துடன் செயல்பட்டது. தலித் மக்களைப் பாதுகாப்பதில் இந்தி யாவிலேயே கேரளா முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் தரவரிசைப்படுத்தியுள்ளது. தொழிலாளர் உரிமைகளின் முன்னணிப் படை மோடி அரசின் ‘தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு’ எதிராகக் கேரளம் போராடி வரு கிறது. ஆனால் காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மற்றும் கர்நாடக அரசுகள் 11 மணி நேர வேலை முறையைத் திணிக்க முயல் கின்றன. விவசாயத் தொழிலா ளர்களுக்குச் சட்டப்பூர்வ உரி மைகளையும் சமூகப் பாது காப்பையும் உறுதி செய்யத் தனிச் சட்டம் இயற்றிய ஒரே மாநிலம் கேர ளம் தான் என்பதை தெலுங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நினைவில் கொள்ள வேண்டும். கேரள மாடல் நிலமற்றவர்களுக்கு நில உரி மை, அனைவருக்கும் இலவச உயர் மருத்துவம் மற்றும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி ஆகியவற்றை உறுதி செய்தது ‘கேரள மாடல்’ ஆகும். ஆனால் தெலுங்கானா மற்றும் கர்நாடக அரசுகள் பொதுக் கல்வியைத் தனியார்மயமாக்கி, சுகாதாரத் துறையைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கி றது. பொய்ப் பிரச்சாரத்திற்காக பொதுப்பணத்தை வீணடிப்பதற்கு ரேவந்த் ரெட்டி வெட்கப்பட வேண்டும். எவ்வளவு ஊடகக் கையாளுதல்களைச் செய்தாலும் கேரள மக்களின் அரசியல் விழிப் புணர்வை விலைக்கு வாங்க முடி யாது” என அவர் சவால் விடுத்துள் ளார்.