மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதா என்று கேட்டபோது, இதற்கு வெளியுறவு அமைச்சகத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகிறார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க உதவிய வர்த்தக அமைச்சகத்திடமே இதற்கான பதில்கள் இல்லை என்கிறபோது வேறு என்ன சொல்ல முடியும்?
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா முஸ்லிம்ளைச் சுட்டுக் கொல்வது போல பாஜக வீடியோவை வெளியிட்டுவிட்டு, பிறகு அதை நீக்கியுள்ளது. இதுதான் பாஜகவின் உண்மையான முகம். பாஜகவினர் பெரும் இனப்படுகொலையாளர்கள். இந்த நஞ்சு, வெறுப்பு மற்றும் வன்முறைக்கு பிரதமர் மோடியே பொறுப்பு.
ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜூபைர்
பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் விளையாடச் சென்றபோது காணாமல் போன 6 வயது சிறுமி, குளத்திற்கு அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
திரைக்கலைஞர் நசிருதீன் ஷா
மாணவர் செயல்பாட்டாளர்கள் விசாரணையே இன்றி பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்; ஒரு முதலமைச்சரே (அசாம்) ‘மியா’ முஸ்லிம்களைத் துன்புறுத்துவதைப் பற்றிப் பேசுகிறார். இந்த வெறுப்பை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தக்கவைக்க முடியும்? என்று பார்க்கலாம்.
