states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வேளாண் விளைபொருட்கள்  சந்தைப்படுத்துதல்:

ஒன்றிய அரசின் மசோதாவுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம்

ஒன்றிய  பாஜக அரசு முன்மொ ழிந்துள்ள வேளாண் விளை பொருட்கள்  சந்தைப்படுத்தல்  வரைவு கொள்கைக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமை யன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  இந்தத் தீர்மானத்தை சம்யுக்த  கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்) வரவேற்பதாக அறிவித்துள்ளதுடன்  மற்ற மாநிலங்க ளும் இது போன்ற தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளது. பஞ்சாப் அரசின் தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்யுக்த  கிசான் மோர்ச்சா தலைவர்கள், பஞ்சாப் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கி றோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெருநிறுவ னங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாண் தேசிய கொள்கை வரைவை விவசாயிகளிடம் திணிக்க முயல்கிறது. விவசாயிகளுக்கு விரோதமாக எந்த நடவடிக்கையிலும் பஞ்சாப் மாநிலம் ஈடுபடாது என்ற உறு தியை அவர்களது தீர்மானம் மீண்டும் நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா, பஞ்சாபில் தாய்மொழி கட்டாயம்

தெலுங்கானா மற்றும் பஞ்சாபில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனை த்துப் பள்ளிகளிலும் தாய் மொழி கட்டாயம் என அறிவிக்கப் பட்டுள்ளது. சிபிஎஸ்சி வரைவு பாடத் திட்டத்தில்  பஞ்சாபி மொழி நீக்கப்பட்டதை தொ டர்ந்து  ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதலமைச்சர்  பகவந்த் மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் சிபி எஸ்சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளி லும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அம்மாநிலத்தில்  சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் இந்த உத்தரவு 2018 இலிருந்து இருப்பதாகவும் கடந்தகால பிஆர்எஸ் அரசு இதனை முறையாக அமல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.