மேற்கு வங்கத்தின் 22ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22ஆவது ஆளுநராக வியாழனன்று காலை லோக் பவனில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜாய் பால், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஎம் மூத்த தலைவர் பிமன் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
