இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று மீண் டும் தொடங்குகிறது. இது இரண்டா வது அமர்வு ஆகும். முதல் அமர்வு பிப்., 1ஆம் தேதி தொடங்கி பிப்., 11 வரை நடைபெற்ற நிலையில், இரண்டாவது அமர்வு திங்களன்று தொடங்கி ஏப்ரல் 2 வரை நடை பெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில், அதாவது திங்களன்று மக்க ளவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சி கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை யில்லா தீர்மானம் விவாதத்திற்கு வரவுள்ளது. இந்த விவாதத்தின் போது ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கையில் அமராமல், ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார். அவருக்கு பதிலாக அவைத் தலை வர் குழுவைச் சேர்ந்த மூத்த உறுப்பி னர் (ஜகதாம்பிகா பால் - பாஜக) அவையை நடத்துவார் என செய்தி கள் வெளியாகியுள்ளன.