states

img

ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்த மோடி அரசு உழைக்கும் மக்களின் ‘ஜன ஆக்ரோஷப் பேரணி’க்கு அறைகூவல்

ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்த மோடி அரசு உழைக்கும் மக்களின் ‘ஜன ஆக்ரோஷப் பேரணி’க்கு அறைகூவல்

புதுதில்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரே லிய ராணுவத் தாக்குதல்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரச் சீரழிவைக் கண்டித்து, மார்ச் 24 அன்று தில்லி ராம் லீலா  மைதானத்தில்  நடைபெறவுள்ள ‘மக்கள் ஆவே சப் பேரணி (ஜன ஆக்ரோஷப் பேரணி Jan Aakrosh Rally) -ஐ நோக்கி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் பிரச்சார இயக்கங்கள், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு மாபெரும் எழுச்சியாக மாறியுள்ளன. சரணாகதியும் எரிசக்தி நெருக்கடியும் உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா நகரில் நடை பெற்ற தியாகிகள் நினைவு நிகழ்வில் உரை யாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவருமான டாக்டர் அசோக் தாவ்லே,”அமெரிக்க ஏகாதி பத்தியத்திடம் மோடி அரசு அப்பட்டமாகச் சரணடைந்துள்ளது” என்று சாடினார். ஈரான் மீதான கொடூரத் தாக்குதல்கள் மற்றும் ஈரானியத் தலைமை படுகொலை செய்யப்பட்ட போது மவுனம் காக்கும் மோடி அரசு, மலிவான விலை யில் கிடைக்கும் ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெய் யைப் புறக்கணித்துவிட்டு, அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெய்யை வாங்குவது தேசநல னுக்கு எதிரான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். பீகாரில் தொடரும் கொடூரங்கள் பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பிரச்சார இயக்கத்தின் போது, நிலப் பிரச்சனை தொடர் பாக நீதி கேட்கச் சென்ற ரோஷன் கதுன் என்ற ஏழைப்பெண், கிராமத் தலைவரின் குடும்பத்தி னரால் தூணில் கட்டப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்ட கொடூரத்தை அசோக் தாவ்லே கடுமையாகக் கண்டித்தார். ரமலான் நோன்பு இருந்த அந்தப் பெண்ணுக்குச் சிறுநீரும், மது வும் கலந்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம், ஆர்எஸ்எஸ்-பாஜக முன்னெடுக் கும் வகுப்புவாத அரசியலின் விளைவு என அவர் சாடினார். இதுதொடர்பாகக் குற்றவாளி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் குழுவினர் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளனர். தேசம் தழுவிய போராட்டத் தயாரிப்புகள் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட் டம் மற்றும் பீகாரின் தர்பங்கா பகுதிகளில் நடை பெற்ற பிரச்சாரப் பேரணிகளின் போது, அதானி- அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும், டிரம்ப்-நேதன்யாகு போன்ற ஏகாதிபத்திய சக்தி களுக்கும் மோடி அரசு சேவை செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. விவசாயிகளுக்கு வழங் கிய எழுத்துப்பூர்வமான வாக்குறுதிகளை மீறி யுள்ள ஒன்றிய அரசுக்கு மார்ச் 24 பேரணி தகுந்த  பாடத்தைப் புகட்டும் எனத் தலைவர்கள் எச்ச ரித்தனர். இந்த இயக்கங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று வரு கின்றனர்.