புத்தக ராயல்டி பணத்தை கியூபாவிற்கு கொடுத்த எம்.ஏ.பேபி
தில்லியில் உள்ள சிபிஐ(எம்) தலைமையகமான ஏ.கே. கோபாலன் பவனுக்கு வருகை புரிந்த இந்தியாவிற்கான கியூபா தூதர் ஜுவான் கார்லோசை கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண் குமார் வரவேற்றனர். தனது புத்தகத்திற்காகப் பெற்ற ராயல்டி பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை கியூபா ஒற்றுமை நிதிக்கு நன்கொடையாக பேபி வழங்கினார்.
