காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் இலக்குகளை அடைய முக்கியத் தடை சட்ட அமலாக்கத்தின் குறைபாடு - மக்கள் கருத்து
இந்திய அரசு சட்டத்தை முறை யாக அமல்படுத்தாதது கால நிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் அதன் இலக்குகளை அடைவதிலும் முக்கி யத் தடையாக உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவது தொடர்பான காப்.30 மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் உலக நாடுக ளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது, அதற்கான செயல்திட்டம் குறித்து விவாதித்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக ஆசிய நாடுகள் உள்ளன. இந்தியாவும் அதில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இந்திய மக்களிடையே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் அதன் இலக்குகளை அடைவதில் தடைகளாக உள்ளவை பற்றியும் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் அரசும் சட்டவிதிகளை முறை யாக அமல்படுத்துவதில்லை. இது காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் இலக்குகளை அடைய மிகப்பெரும் தடையாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்தினர் இதுவே மிகப்பெரிய தடை என்று கூறியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சட்டங்களும், விதிகளும் இருந்தாலும், அவற்றைத் திறம்படச் செயல்படுத்தா மல் இருப்பது தான் பிரச்சனை. கார்ப்பரேட்கள் சட்டவிதிகளை முறை யாகப் பின்பற்றுவதில்லை என தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வரு வதையே இந்த பதில் காட்டுகிறது. அதே போல காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இயற்கை எரிசக்தியான சூரிய ஆற்றல் உள்ளிட்ட பசுமை ஆற்ற லுக்கு மாறுவதற்கும் தேவையான அளவு பணம் ஒதுக்கப்படாமல் இருப்பது அல்லது முதலீடு செய்யப்படாமல் இருப்பது தடையாக உள்ளது என்று 49 சதவீதத்தினர் கூறியுள்ளனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பசுமைத் தொழில்நுட்பங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதி லும், பயன்படுத்துவதிலும் உள்ள நடை முறைச் சிக்கல்கள் ஒரு தடையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் தடையாக உள்ளது என 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் முக்கியத் தடைகள் என 43 சதவீதத்தின ரும் அரசியல் ரீதியாக உறுதியான நடைமுறையை கொண்டுவராமல் இருப்பது முக்கியத் தடை என 41 சதவீதத்தினரும் குறிப்பிட்டுள்ளனர்.