states

img

துபாயில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு

துபாயில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகப் பயணமாக துபாய் சென்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ‘ஓர்மா’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், புலம்பெயர்ந்த மலையாளிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமைச்சர் சஜி செரியன், தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ.ஜெயதிலக், என்.கே.குஞ்சாஹம்மது மற்றும் பலர் பங்கேற்றனர்.