states

img

10ஆண்டுகளில் 36 சதவீதம் புற்றுநோய் அதிகரிப்பு

10ஆண்டுகளில்  36 சதவீதம்  புற்றுநோய் அதிகரிப்பு

புற்றுநோய் பாதிப்பால் பெண்கள் அதிகளவு இறக்கிறார்கள். அடுத்து வரும் இருபது ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  ஆய்வு தெரிவித்துள்ளது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் சமீபத்திய அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் புற்றுநோயால் பாதிக் கப்பட்டுள்ள ஆண்களை விட அதிகளவு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.  பாலினத்தின் அடிப்படையில்  குழந் தைப் பருவம், இளம் வயது, நடுத்தர வயது மற்றும் முதியோர் என நான்கு வெவ்வேறு வயதுக் குழுக்களிலும் தோல் புற்றுநோய் உட்பட  36 வகை யான புற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  

2012 மற்றும் 2022 க்கு இடையில், புற்று நோய் பாதிப்பு 36 சதவீதம் அதிகரித் துள்ளது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் புற்றுநோய் குறித்து தரவுகளை சேர்த்து வைத்துள்ள குளோ போகான் என்ற தளத்தின் தரவைப் பயன் படுத்தி ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில், உலகளவில் புற்றுநோய் பாதிப்புகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்திலும், இறப்பு விகிதத்தில் சீனாவிற்கு அடுத்து இரண்டா வது இடத்திலும் உள்ளது என தெரி வித்துள்ளது.

பெண்களிடையே புற்றுநோய் பாதிப்பு 1.2 சதவீதத்தில் இருந்தது 4.4 சத வீதமாக அதிகரித்துள்ளது.  ஆண்களி டம் 1.2 சதவீதத்தில் 2.4 சதவீதமாக அதி கரித்துள்ளது. புற்றுநோய் கண்டறியப் பட்டவர்களில் ஐந்து நபர்களில் மூன்று பேர் இறக்கின்றனர்.  மேலும் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதமானது 2022 மற்றும் 2050 க்கு இடையில்  64.7 சதவீதத்தில் இருந்து  109.6 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கவனம், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, விழிப்புணர்வுப் பிரச்சாரங் களை மேற்கொள்வது அவசியம் என்ப தையும் ஐசிஎம்ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.