states

img

ஸ்கேன் இந்தியா

உடும்புப்பிடி

வாக்காளர்களை நீக்கும் நடைமுறை யாக மாறியுள்ள திருத்தப் பணி மாறி யுள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி பெருந்திரள் போராட்டங்களை மேற்கு வங்கத்தில் நடத்தி வருகிறது. இந்த வாக்காளர் நீக்கத்தை நியா யப்படுத்தி வரும் பாஜக தலைவர்கள் மக்களின் எதிர்ப்பை சந்திக்கின்றனர். புருலியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுதீப் முகர்ஜியை விரட்டி, விரட்டிக் கேள்வி கேட்டுள்ளனர். ஒரு பகுதியில் இருந்து வேகமாகக் கிளம்பி அடுத்த பகுதிக்குச்  சென்றவர், அங்கும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் இவ ருக்காகக் காத்திருந்ததைப் பார்த்து மிரண்டிருக்கி றார். வாக்குச்சாவடி மட்ட அலுவலர்களும், தங்க ளைத் தொந்தரவு செய்வதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். உடும்புப்பிடியாக இருக்கிறதே என்று சொல்லி கொல்கத்தாவுக்கு பறந்து விட்டார் சுதீப் முகர்ஜி.

ஆமை வேகம்

பயணிகளிடம் இருந்து கருத்துகளைப் பெறுங்கள் என்று இந்திய ரயில்வேக்கு அத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வலி யுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் சுமார் எட்டாயிரம் ரயில் நிலை யங்கள் உள்ளன. இவற்றில் அம்ரித் பாரத் ரயில் நிலையம் என்ற திட்டத்தின்கீழ் 1,337  ரயில் நிலையங்கள் அடையாளம் காணப் பட்டன. ஆமை வேகத்தில்தான் திட்டம் நகர்கிறது.  172 ரயில் நிலையங்களில்தான் இந்தத் திட்டம் நிறைவேறியுள்ளது. ஒரு புறம், இந்தத் திட்டம் நகராமல் இருக்கை யில், மறுபுறம் நிறைவேற்றப்பட்ட இடங்க ளில் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்ப தைக் கேளுங்கள் என்று நிலைக்குழு சொல்கிறது. நமக்கு நாமே தோளில் தட்டிக் கொள்வது நியாயமானதாக இருக் காது என்று கூறியுள்ள நிலைக்குழு உறுப்பினர்கள், பிற இடங்களில் பணிகளைச் செம்மையாகச் செய்வ தற்கு மக்கள் கருத்து உதவும் என்று சொல்கிறார்கள்.

வேட்டையாடப்பட்ட மான்

15 நாட்களுக்கு மேலாகியும் இறந்து போன மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வால்டே வுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கவில்லை. மே 4, 2023 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒரு கும்பலால் அவர் தாக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் உயிருக்குப் போராடி வந் ்தார். பிப்ரவரி 21, 2026 அன்று சிகிச்சை பலனளிக்கா மல் உயிரிழந்தார். குக்கி-சோ பழங்குடிப் பிரி வைச் சேர்ந்த அவரது மரணத்திற்கு பொறுப்பு ஏற் காமல் இறுதிச்சடங்குகளைச் செய்ய மாட்டோம் என்று குக்கி-சோ பிரிவினர் கூறுகிறார்கள். தில்லி யில் இருந்து வால்டேயின் உடல், மிசோரம் வழி யாகக் கொண்டு வரப்பட்டது. இரட்டை எஞ்சின் அரசின் சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை மை என்றால், மக்களின் நிலைமை எப்படிப்பட்ட தாக இருக்கும் என்பதை மணிப்பூருக்கு வெளியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பம்மும் குள்ளநரி

ஒன்றிய அரசின் தேசிய கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தின் எட்டாம் வகுப்புப் பாட நூல் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியது. உடனே, இல்லையில்லை. தெரியாமல் நடந்து விட்டது என்று விற்பனையான புத்தகங்களை திரும் பப் பெறத் தொடங்கினார்கள். ஆனால், யாரையும் பொ றுப்பாக்க மறுத்து வருகின்றனர். அரசியல் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்காது என்று கல்வியா ளர்கள் கூறியுள்ளனர். அதோடு, தங்களைப் பற்றிய கருத்துகள் வந்தவுடன் தலையிட்ட உச்சநீதிமன்றம், வரலாற்றைத் திருத்துவது, அறிவியலைப் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளும்போதும் கவனித்திருக்க வேண்டும் என்கி றார்கள். தனது குள்ளநரித் தந்திரத்தைத் தொடர்ந்து  காட்டி வரும் ஒன்றிய ஆட்சியாளர்கள், உச்சநீதி மன்றம் தலையிட்டதால் பம்மியுள்ளார்கள். மற்றபடி, அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலையைச் செய்வார் கள் என்கிறார்கள் கல்வியாளர்கள்.