நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் குஜராத் பாஜக அரசு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் சிஐ டியு தொழிற் சங்கம் தலைமையில் நூற்று க்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பான குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு பாஜக தலைமையிலான மாநில பாஜக அரசு மறுத்து வருகிறது. இதனை கண்டித்து சிஐடியு தலைமையில் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இப்போராட்டத்தில் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை கண்டித்தும், பணி நோக்கங்களுக்காக மொபைல் போன்கள் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஊழியர்கள் முன் வைத்துள்ளனர். பாஜக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் ஊழியர்களை பழி வாங்குவது போல் நடந்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை தீவிரப் படுத்தும் வகையில் டிசம்பர் 1 முதல் 10 வரை அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
