மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் சிபிஐ தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு
புதுதில்லி தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட தில்லி முன்னாள் முத லமைச்சரும், ஆம் ஆத்மி தலைவ ருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன் னாள் தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா (ஆம் ஆத்மி), தெலுங்கானா முன்னாள் எம்எல்சி கவிதா உள்ளிட்ட 23 பேரை பிப். 27 அன்று தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ (மத்திய புலனாய்வு) மேல்முறை யீடு செய்த மனு மார்ச் 9 அன்று நீதி பதி சுவர்ணா காந்த சர்மா அமர் வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ யின் மனுவை விசாரணைக்கு ஏற்ப தாக கூறிய, நீதிபதி சுவர்ணா காந்த சர்மா கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 16ஆம் (திங்களன்று) தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, மதுபானக் கொள்கை வழக்கின் மேல்முறை யீட்டு மனுவை நீதிபதி சுவர்ண காந்த சர்மாவிடமிருந்து வேறு நீதி பதிக்கு மாற்ற வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது இருந்தது. ஆனால் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத் யாயா சிபிஐ கோரிக்கையை நிரா கரித்துள்ளார். சிபிஐ கோரிக்கை மனுவிற்கு பதில் அளித்த தில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா,”நீதிபதி சுவர்ண காந்த சர்மா தற்போதுள்ள நீதி மன்றப் பணி ஒதுக்கீட்டின் (Roster) அடிப்படையிலேயே இந்த மனு வை விசாரித்து வருகிறார். இதில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்வ தற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என உத்தரவிட்டுள்ளார். இன்று மீண்டும் விசாரணை நீதிபதியை மாற்றக் கோரும் சிபிஐ மனு நிராகரிக்கப்பட்ட நிலை யில், மதுபானக் கொள்கை வழக்கின் மேல்முறையீட்டு மனு வின் 2ஆம் கட்ட விசாரணை திங்க ளன்று நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்விலேயே விசார ணைக்கு வரவுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.