states

img

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சிபிசிஐ தலைவராக நியமனம்

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சிபிசிஐ தலைவராக நியமனம்

ஹைதராபாத் இந்திய கத்தோலிக்க ஆயர்  பேரவை (சிபிசிஐ - Catholic Bishops’ Conference  of India) என்பது, இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க ) கிறிஸ்தவர்களின்) ஆயர்களின் மிக  உயரிய கூட்டமைப்பு ஆகும். இது 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தில்லியில் இதன் தலைமையகம் உள்ளது. இந்நிலையில், இந்த கத்தோ லிக்க ஆயர் பேரவையின் தலைவ ராக தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத் கத்தோலிக்கச் சபையின்  திருத்தந்தை பூலா அந்தோணி  (64 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். இந்த அறிவிப்பை சிபிசிஐ பிப்., 7 அன்று அறிவித்தது. 2022ஆம்  ஆண்டு முதல் தலைவராகப் பதவி  வகித்த திருச்சூர் (கேரளம்)  சீரோ-மலபார் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் என்பவருக்குப் பிறகு பூலா  அந்தோணி பொறுப்பை ஏற்கிறார்.  பூலா அந்தோணி தலித் சமூ கத்தைச் சேர்ந்தவர் ஆவர். தலித்  சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  சிபிசிஐ தலைவராக பொறுப்பேற் பது இதுவே முதன்முறையாகும். இந்தியாவின் சுமார் 2 கோடி கத்தோலிக்கர் களை (கிஸ்தவ மதத்தின் ஓவர் பிரிவு) வழிநடத்  தும் முதல் தலித் பேராயர் என்ற  சிறப்பை பூலா அந்தோணி பெற்  றுள்ளார்.