states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

தேர்தல்களில் திசைதிருப்பலுக்கு உதவ கிப்ஃபி மசாலா பத்திரத்தில் பெமா மீறல்கள் இருப்பதாக அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவுக்கு சேவை செய்யும் அமலாக்கத்துறையின் அரசியல் விளையாட்டு இது. ஆனால் எதற்காக ஆஜராக வேண்டும் என்னும் கேள்விக்கு இதுவரை நீதிமன்றத்தின் முன்பு அமலாக்கத்துறையால் இன்னும் தெளிவுபடுத்த முடியவில்லை.

திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா

ஒன்றிய அரசு கூறும் அனைத்துக்கும் தலையாட்டி செல்வது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை. மக்களுடைய சிக்கல்களை பேசுவதற்காகவே நாடாளுமன்றத்திற்கு வருகிறோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி

முன்பு தில்லி எல்லையில் 900 விவசாயிகளை காவு வாங்கிய மோடி அரசு, தற்போது எஸ்ஐஆர் மூலம் அரசு ஊழியர்களையும் காவு வாங்கி வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் என்னும் கொடூர அழுத்தத்தால் உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இதைப் பற்றி பேச மோடி அரசு அஞ்சுகிறது.