கேரளம் மாநிலம் கோட்ட யத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி,”ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஎம் உடன் சித்தாந்த ரீதியாகப் போராடுகிறேன்” என்று கூறினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பொருத்தமற்ற பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்,”அரசியல் ரீதியாக ராகுல் காந்தியை “கத்துக்குட்டி யாகவே” வைத்திருக்க கேரளாவின் காங்கிரஸ் கட்சி தீர்மானமாக இருக்கிறது” என கூறி அவர் கண்ட னம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”கேரளத்துக்குச் செல்லும் போதெல்லாம் அபத்தமான விஷயங்களைப் பேசுவது ராகுலின் வழக்கமாக உள்ளது. அதற்கு கேரள காங்கிரஸ் கட்சிதான் கார ணம். ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்கொள்ள அவர் கேரளத்தைப் போர்க்களமா கத் தேர்ந்தெடுத்தார். அங்கு இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக் கும் இடையிலான சண்டை நிகழ்ந்த
தாகவும் அவர் கூறினார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி போன்ற தலைவர் கள், மதச்சார்பற்ற கட்சிகளின் அணி யினரிடையே குழப்பத்தையும், பிளவுகளையும் உருவாக்குவ தற்குப் பதிலாக, மதச்சார்பற்ற சக்தி களை ஒன்றிணைப்பதே அவரது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகி றேன். ஆர்எஸ்எஸ்-ஐ எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ராகுல் காந்தி பாடம் நடத்தத் தேவையில்லை. குறிப்பாக அரசியல் ரீதியாக ராகுல் காந்தியை “கத்துக்குட்டி யாகவே” வைத்திருக்க கேரளா வின் காங்கிரஸ் கட்சி தீர்மானமாக இருக்கிறது என்று நான் நினைக்கி றேன். அவரையும் அவரது சகோதரி யையும் ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்த போராட்டம் எனும் பெயரில் முஸ்லீம் லீக்கின் பாதுகாப்பான தொகுதி யான வயநாடில் போட்டியிட வைத்தனர். இப்போதைய ராகுல் காந்தியின் பொருத்தமற்ற உரையை பற்றி “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் எழுப்பப்படும். ஆஎஸ்எஸ்-ஐ பல மாக்குவதில் காங்கிரசின் பங்கு குறித்து நினைவூட்டப்படும். பாபர் மசூதியின் கதவுகளை திறந்துவிட்ட திலிருந்து, அது இடிக்கப்படும் வரை பாஜகவை வளர்த்துவிட்டதில் காங்கிரசின் பங்கு முன்வைக் கப்படும். ஆர்எஸ்எஸ்-ஐ பற்றி ராகுல் காந்தி எதை அறிவாரோ, அது எங்க ளது மறைந்த தலைவர் சீத்தாராம் யெச்சூரியிடமிருந்துதான் கற்ற தாக இருக்கும் என்பதுதான் முகை நரண்” என அவர் கூறினார்.