states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 

இன்னும் ஒரு வருடத்தில், அஸ்ஸாம் மாநில மக்கள் ஊழல், பிரிவினை மற்றும் பழிவாங்கும் அரசியலை முன்னெடுத்து வருபவர்களை கைவிடப் போகிறார்கள். இந்த மாற்றத்தை கொண்டுவர  அசாமின் 3.5 கோடி மக்களும் காங்கிரசை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களால் இயக்கப்படும் எந்தப் பிரச்சாரமும் அவர்களின் மாற்றத்திற்கான உறுதியை அசைக்க முடியாது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மணிப்பூரில் அரசாங்கத்தின் ஆயுதக்கிடங்கில் இருந்து 6500 ஆயுதங்கள் எடுக்கப்பட்டன/ கொடுக்கப்பட்டன. ஆனால் ஆளுநர் கொடுத்த ஏழு நாள் கெடுவில் இதுவரை 1800 ஆயுதங்கள்  மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 6 நாட்களில் நாளொன்றுக்கு 300க்கும் குறைவான ஆயுதங்களே திரும்பி கொடுக்கப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர் சவுரவ் தாஸ்

பத்திரிகை சுதந்திரம் குற்றமல்ல, பத்திரிகையின் சுதந்திரமான செயல்பாடு என்பது தங்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் சலுகை அல்ல. அது ஜனநாயகத்தின் அடித்தளம் என்பதை ஆளும் கட்சிகள் மறந்து விடுகின்றன.

பத்திரிகையாளர் சுஹாசினி

2020 முதல் ஐரோப்பிய ஒன்றியம் -இந்தியாவின்  வருடாந்திர உச்சிமாநாடு நடக்கவில்லை. இப்போது 2025 இல் உச்சிமாநாட்டிற்குத் தயாராகி வருகின்றன. 2022 இல் ஐரோப்பா -இந்தியா இடையே பரந்த அடிப்படையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின. எனினும் அதில்  முன்னேற்றம் இல்லை.