ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அமர்ந்தவுடன் பெண்கள், சிறுமி களுக்கு எதிரான பாலியல் குற்றங் கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 5க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். குறிப்பாக பாலசோரில் கடந்த வாரம் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்த லால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் என 8 எதிர்க்கட்சிகள் இணைந்து வியாழக்கிழமை அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இந்நிலையில், ஒடிசாவின் பூரி மாவட் டத்தில் 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. பூரி மாவட்டம் பலங்கா அருகே பயாபர் கிராமத்தில் சிறுமி தோழியின் வீட்டிற்குச் சென்று கொண்டி ருந்தபோது, 3 மர்ம நபர்கள் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த தாகவும், சம்பவத்திற்குப் பிறகு அங்கி ருந்து தப்பி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் சாட்சியம் அளித்துள்ளனர். தற்போது சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் தொல்லையா?
15 வயது சிறுமி மீது ஏன் 3 மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர் என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பாலி யல் அத்துமீறலால் இச்சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என செய்திகள் வெளியாகி யுள்ளன.