மகா சிவராத்திரியை மதவெறி வன்முறை நாளாக மாற்றிய பாஜக மாணவர் அமைப்பு
மகா சிவராத்திரி தினத்தன்று தில்லியில் உள்ள தெற்கா சிய பல்கலைக்கழகத்தில் (SAU) அசைவ உணவு வழங்கிய தற்காக உணவுக்கூட ஊழியர்க ளையும், மாணவர்களையும் பாஜக வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தெற்காசிய பல்கலைக்கழ கத்தின் இரண்டாவது மெஸ்ஸில் மதிய உணவுக்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பை ரத்தன் சிங், அன்ஷுல் சர்மா, ராம் ஷர்மா ஆகியோர் தலைமையிலான குண்டர்கள் மகா சிவராத்திரியில் அசைவ உணவு வழங்கக் கூடாது. சாப்பிடக்கூடாது என கூச்சலிட்டது டன் அனைவர் மீதும் தாக்குதல் நடத்த துவங்கினர். இந்த சம்பவம் குறித்து வெளியான காணொலி யில் ஒரு மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்து ஏபிவிபி குண்டர்கள் தாக்கியது பதிவாகியுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் உணவு உரிமையை உறுதிசெய்யும் வகையில் சைவம் மற்றும் அசைவ உணவுகளை ஏற்பாடு செய்திருந்த நிலையிலும் மகா சிவராத்திரியை மதவெறியை கட்டவிழ்த்துவிடும் நாளாக மாற்றும் உள்நோக்கத்து டன் ஏபிவிபி குண்டர்கள் இந்த தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதல் திடீர்த் தாக்குதல் அல்ல. மகா சிவராத்திரி க்கு முந்தைய நாட்களில், மாண வர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் சில விவாதங்கள் ஏற்கனவே சூடுபிடித்திருந்தன. இந்நிலையில் தான் ஏபிவிபி அமைப்பினர் ‘சாத் விக்’ (சுத்த சைவ) உணவை மட்டு மே வழங்க வேண்டும் என திட்டமிட்டு மதவெறியை தூண்டியுள்ளனர். ஆனால் மெஸ் நிர்வாகம் இந்த அழுத்தத்தை ஏற்க மறுத்து விட்டதாகவும் விரதத்தைக் கடைப் பிடிக்காத மாணவர்கள் அனைவ ருக்கும் உணவுக் கட்டுப்பாடு விதிப்பது நியாயமற்றது என தெரி விக்கவும் கூறப்படுகின்றது. இதையும் மீறித்தான் ஏபிவிபி யினர் கல்வி வளாகத்தில் மத வெறியை தூண்டி தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
யஷாதா என்ற மாணவியை தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தியதுடன்,அவரது அந்தரங்க உறுப்புகளை பிடித்து துன்புறுத்தி யதாகவும் அவரே ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய கூட்டத்தில் இருந்த ரத்தன் சிங் மீது யஷாதா ஏற்கனவே பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்காகப் புகார் கொ டுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பல் கலைக்கழக அதிகாரிகள் சிலர் அவரை பாதுகாப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் தில்லி மாநி லக் குழு கடுமையான கண்ட னத்தை தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. ஏபிவிபி தனது சித்தாந்தத்தை ஒட்டுமொத்த மாணவர்களின் மீதும் திணிக்க முயல்கிறது. பல்கலைக் கழகம் ஒரு பொதுவான இடம்.
ஒவ் வொருவருக்கும் தங்கள் உண வைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. இந்த தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை, மாணவர்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பல்கலைக்கழக நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. பல் கலைக்கழக முதல்வர் நவ்நித் ஜா, கபில் சர்மா ஆகியோர், இத்தகைய புகார்களை தொடர்ந்து புறக்கணிப் பதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததன் காரணமே ஏபிவிபி க்கு வன்முறையை கட்டவிழ்த்து விட வாய்ப்பாக அமைத்துள்ளது எனவும் பல மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.