பீகார் மாநிலத்தில் பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு அலை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கருத்துக்கணிப்புகள், உளவுத் தகவல்களை தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
36 லட்சம்
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக தேர்தல் ஆணையம் மூலம் பீகாரில் தலித், பழங்குடி, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையி னர்களின் வாக்குகளை நீக்கும் வேலையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவை யில் உள்ளது. ஆனாலும் தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்க தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. ஜூலை 18 அன்று நிலவ ரப்படி 36 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இந்நிலையில், வாக்காளர் நீக்கம் செய்யும் செயல்முறைகள் அனைத்தும் பாஜகவிற்கு ஆதரவான முறைகேடுகள் என கண்டறிந்து, அதனை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட பீகாரின் மூத்த பத்திரிகையாளரான அஜித் அஞ்சும் மீது வழக்குப்பதிவு மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. பீகார் மாநிலம் பாலியாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி யதற்காக அஜித் அஞ்சும் மற்றும் அவரது கேமராமேன் மீது சாகேப்பூர் கமால் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தொகுதியின் பிஎல்ஒ (பூத் லெவல்அதிகாரி - Booth Level Officer) அசாருல்ஹக் அளித்த புகாரின் பேரில் பாலியா காவல்துறை வழக்குப்பதிவு (அரசுப் பணிகளைத் தடுத்ததாகவும், வகுப்புவாத பகைமையைப் பரப்பியதாகவும்) செய்துள்ளது.
மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்
தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர் அஜித் அஞ்சும் செய்தியா ளர்கள் சந்திப்பின் போது கூறுகையில்,“என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஒரு பத்திரி கையாளராக, எனக்கு அளிக்கப்பட்ட ஒரு சான்றி தழ் ஆகும். மிரட்டல் இருந்தாலும் தொடர்ந்து செய்தி வெளியிடுவேன். நான் பயப்பட மாட்டேன். உண்மையை மட்டுமே வெளிப் படுத்துவேன்” என அவர் கூறியுள்ளார். பத்திரிகையாளர் அஜித் அஞ்சும் மீதான வழக்குப் பதிவு மூலமான மிரட்டலுக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.