states

img

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா பாஜகவின் மிரட்டலால் மாநிலங்களவை பதவிக்கு வேட்பு மனு?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா பாஜகவின் மிரட்டலால் மாநிலங்களவை பதவிக்கு வேட்பு மனு?

பாட்னா 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப் பற்றியது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 10ஆவது முறையாக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சர்களாக சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப் பேற்றனர். இந்நிலையில், 19 ஆண்டுகளுக்கு மேலாக பீகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் (75) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டி யிடப் போவதாக புதனன்று செய்திகள் வெளி யாகின. தொடர்ந்து வியாழனன்று அதிகாலை நிதிஷ் குமார் தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் எனக்கு தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். இதன் காரணமாகவே பீகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக நேர்மை யாக சேவை செய்து வருகிறோம். எனது நாடாளுமன்ற வாழ்க்கையின் தொடக்கத்திலி ருந்து பீகார் சட்டப்பேரவையின் இரு அவை களிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று விரும்பினேன். எனவே, இப்போது மாநிலங்களவை உறுப்பினராக, வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். மகனுக்காக? பீகாரில் காலியாக உள்ள 5 மாநிலங்கள வை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் வியாழனன்று நிறைவடைந்தது. வியாழனன்று காலை நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் உள்ளிட்ட 5 பேர் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.,யாக தேசிய அரசியலுக்குள் மீண்டும் நுழைகிறார். விரைவில் அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்தார்? யார் அவரை ராஜி னாமா செய்யக் கூறியது? என்பது தொடர்பாக  உறுதியான எந்த காரணமும் வெளியாக வில்லை. ஆனால் மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் அமைச்சர் அல்லது துணை  முதலமைச்சராக களமிறக்கிவிட்டு, நிதிஷ் குமார் தேசிய அரசியலின் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார் என ஐக்கிய ஜனதாதளம் கட்சி மூத்த தலைவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜக காரணமா? 2025ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பிலேயே பீகாரில் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக பல்வேறு தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஏற்கவில்லை. எனினும் தேர்தல் முடிந்த பின்பு நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு உள்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை பாஜக கைப்பற்றி யது. இதனால் நிதிஷ் குமார் பொம்மை முதல மைச்சராக செயல்பட்டு வந்தார்.  இத்தகைய சூழலில், கடந்த மாதம் தங்கள் கட்சியின் தேசிய தலைவராக பீகாரைச் சேர்ந்த நிதின் நபீனை நியமித்தது. தேசிய அரசியலில் பாஜகவின் முகமாக அறியப்படாத நிதின் நபீனை பாஜக தலைவராக நியமித்தது வியப்பாக இருந்தது. நிதின் நபீன் தேசிய தலைவராக பொறுப்பேற்கும் போது, ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலை வர்களை பாஜக தங்கள் பக்கம் வளைத்தது. நிதிஷ் குமாருக்கு குடைச்சல் கொடுக்கவே இதனை மேற்கொண்டதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இடை யில் நிதிஷ் குமார் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களை மத்திய அமைப்பு கள் மூலம் பாஜக மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகின. இத்தகைய சூழலில், நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜி னாமா செய்யும் நோக்கத்தில், மாநிலங்கள வைக்கு போட்டியிட்டுள்ளார்.  பாஜகவிடம் பீகார் நிதிஷ் குமார் ராஜினாமாவால் கூட்டணி சார்பில் முதலமைச்சர் பதவி பாஜக வசம் செல்கிறது. இதனால் பாஜகவிடம் பீகார் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது. இது முதல் முறையாகும்.  இத்தகைய சூழலில், விரைவில் பாஜக சார்பில் புதிய முதலமைச்சர் பொறுப் பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த முதலமைச்சர் தேர்வில் பாஜகவின் சாம்ராட் சவுத்ரி முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பாஜக சார்பில் துணை முதலமைச்சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கி றார். அதே போல ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய், திலீப் ஜெய்ஸ்வால், சஞ்சீவ் சவுராசியா ஆகியோரும் பீகார் முதலமைச்சர் பந்தயத்தில் உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.